முகப்பு
தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:40 PM
முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாமில் மாதிரி வாக்கினை செலுத்திய ஆட்சியர் ஏ.ஆர். கிளாஸ்டன் புஷ்பராஜ்.
பகிர்:


ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாமை  மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஏ.ஆர். கிளாஸ்டன் புஷ்பராஜ் மாதிரி வாக்கினை செலுத்தி தொடங்கி வைத்தார். இதில், பேருந்து நிலையத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மாதிரி வாக்கு செலுத்தி விழிப்புணர்வு அடைந்தனர். 

இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →