முகப்பு
தமிழ்நாடு

திமுக ஒதுக்கும் தொகுதிகள் போதுமானதாக இல்லை: கே.பாலகிருஷ்ணன்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதிகள் போதுமானதாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:40 PM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதிகள் போதுமானதாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று (மார்ச் 6) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்று தெரிகிறது.

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், ''திமுக ஒதுக்குவதாகக் கூறும் தொகுதிகள் போதுமானதாக இல்லை. கட்சியினருடன் ஆலோசித்து மாலையில் தொகுதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்பதாக திமுகவினர் தெரிவித்துள்ளனர்'' என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →