ராசிபுரம் அருகே தீ விபத்து: 5 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
ராசிபுரம் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து குடிசை வீடுகள் தீயில் எரிந்து அழிந்தது.
தமிழ்நாடுராசிபுரம் அருகே தீ விபத்து: 5 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
ராசிபுரம் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து குடிசை வீடுகள் தீயில் எரிந்து அழிந்தது.
ராசிபுரம்: ராசிபுரம் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து குடிசை வீடுகள் தீயில் எரிந்து அழிந்தது.
ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சி 9 ஆவது வார்டு சக்தி நகரைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் (42). இவரது வீட்டிற்கு அருகில் உறவினர்களான ராமசாமி மகன் ராஜேந்திரன் (50), வீரமுத்து மகன் தமிழரன் (65), குப்பன் மகன் வேலாயுதம் (75), தாண்டவன் மகன் கந்தசாமி (55) ஆகிய 5 பேரது வீடுகளும் உள்ளது. இவர்கள் ஊரில் திருவிழா என்பதால் கலை நிகழ்ச்சிகளைக் காண சென்று இருந்தார்கள்.
பாதி எரிந்த நிலையில் ஆடு.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் சேகர் வீட்டில் இருந்து புகை வந்தது. அருகில் இருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டனர் அதற்குள் சேகர் வீடு தீபிடித்தது. அருகில் உள்ள வீடுகளிலும் தீ பரவியது.
ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். அதற்குள் ஐந்து வீடுகளும் முழுவதுமாக எரிந்து விட்டன. இவ்விபத்தில் வீட்டில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருள்கள், பள்ளி பாட புத்தகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து அழிந்தது.
இதுகுறித்து சேகர் மனைவி பாக்கியம் என்பவர் தாங்கள் வைத்துள்ள ஆவணங்கள் அனைத்தும் எறிந்து விட்டதாகவும், மேலும் ஆசையாக வளர்த்த ஆடு கோழிகள், இருசக்கர வாகனம் அனைத்தும் தீக்கிரையாகி விட்டன என்றும் தாங்கள் வாழ்வதற்கு வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். அரசு எங்களுக்கு முறையான நிவாரணம் வழங்கி உதவிட வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது வேறு காரணமா? என விசாரித்து வருகின்றனர்.