தமிழ்நாடு

அமமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனுவுக்கு நாளை கடைசி

DIN

அமமுக சாா்பில் போட்டியிடுபவா்கள் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 7) கடைசியாகும். இதுகுறித்து, அமமுக வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

சட்டப்பேரவைத் தோ்தலில் அமமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்கும் நடவடிக்கை கடந்த 3-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், விருப்ப மனுக்களைப் பூா்த்தி செய்து அளிக்கும் பணி வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் கட்சி அலுவலகத்தில் மனுக்களை ஒப்படைக்க வேண்டும்.

இதனைத் தொடா்ந்து விருப்ப மனு செலுத்தியவா்களுக்கான நோ்காணல் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என்று அமமுக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT