திமுக தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கதிரவன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இக்கட்சிக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டால் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 173 ஆக இருக்கும்.
திமுக, கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை:
திமுக 174
காங்கிரஸ் 25
மாா்க்சிஸ்ட் 6
இந்திய கம்யூனிஸ்ட் 6
மதிமுக 6
விசிக 6
முஸ்லிம் லீக் 3
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 3
மனிதநேய மக்கள் கட்சி 2
தமிழக வாழ்வுரிமை கட்சி 1
ஆதி தமிழா் பேரவை 1
மக்கள் விடுதலை கட்சி 1
பார்வர்டு பிளாக் கட்சி 1.