முகப்பு
தமிழ்நாடு

சென்னை பூக்கடை பகுதியில் 16.5 கிலோ வெள்ளி, ரூ. 4 லட்சம் பறிமுதல்

சென்னை பூக்கடை பகுதியில் 16.5 கிலோ வெள்ளிக் கட்டிகள் மற்றும் ரூ. 4 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை பூக்கடை பகுதியில் 16.5 கிலோ வெள்ளிக் கட்டிகள் மற்றும் ரூ. 4 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு  வருகின்றனர். 

இன்று சென்னை துறைமுகம் தொகுதிக்கு உள்பட்ட பூக்கடை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனம் ஒன்றில் இருந்து ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 16.5 கிலோ வெள்ளிக் கட்டிகள் மற்றும் ரூ. 4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

ஆவணங்கள் இன்றி இந்த வெள்ளிக் கட்டிகள் மற்றும் பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →