புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி
புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.
அதேசமயம் 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் முழு ஆண்டு தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.