முகப்பு
தமிழ்நாடு

ராணிப்பேட்டை: தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் 

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் 
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு உறுதி செய்யும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் எ.ஆர்.கிளாஸ் மட் புஷ்பராஜ் குறும்படம் வெளியிட்டார். இந்த குறும்பட தட்டுக்களை மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். 

புன்னகையின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.