உசிலம்பட்டியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது அமமுக!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் முதற்கட்ட பிரசாரத்தைத் சனிக்கிழமை தொடங்கினார்.
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் முதற்கட்ட பிரசாரத்தைத் சனிக்கிழமை தொடங்கினார்.
உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அமமுக சார்பாக, உசிலம்பட்டி மதுரை மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ஐ.மகேந்திரன் வாழ்ந்த ஊரில் உள்ள அங்காள பரமேஸ்வரி குலதெய்வத்தின் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கி வாலாந்தூர் இருந்து குப்பணம்பட்டி சேம்பர் வழியாக உசிலம்பட்டிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மூக்கையாத் தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து பேரையூர் சாலை வழியாக பொது மக்களிடம் வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதில், உசிலம்பட்டி நகரம் மற்றும் ஒன்றிய செல்லம்பட்டி ஒன்றியம் ஏழுமலை பேரூர் கலக கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.