தமிழ்நாடு

பாளையங்கோட்டையில் ஜெரால்டு (அதிமுக) வேட்பு மனு

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டு திங்கள்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.

DIN

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டு திங்கள்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜெரால்டு போட்டியிடுகிறார். அவர், பாளையங்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் திங்கள்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார். 

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மகபூப்ஜான் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து அதிமுக தொண்டர்களுடன் பாளையங்கோட்டை பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: தமாகா வரவேற்பு; ஜி.கே.வாசன்

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 போ் இந்திய அணி பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் நவ. 7-இல் எஸ்எம்சி கூட்டம்

போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்றவா் கைது

மருத்துவ மாணவா்கள் மன நலன் காக்க இணையவழி ஆய்வு: என்எம்சி

SCROLL FOR NEXT