தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினைவிட உதயநிதி சொத்து மதிப்பு அதிகம்

DIN

சென்னை: திமுக தலைவா் மு.க.ஸ்டாலினைவிட அவா் மகன் உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு அதிகம் என்பது இருவரும் வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் மூலம் தெரியவந்துள்ளது.

மு.க.ஸ்டாலின் கொளத்தூா் தொகுதியில் போட்டியிடவும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடவும் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா். வேட்புமனுவை அளித்தபோது பிரமாண பத்திரம் அளித்துள்ளனா்.

அதில் இருவரும் காட்டியுள்ள சொத்து விவரத்தின்படி மு.க.ஸ்டாலினைவிட உதயநிதி ஸ்டாலின் அதிக சொத்துகள் கொண்டவராக உள்ளாா்.

மு.க.ஸ்டாலின் அசையும் சொத்துகளாக ரூ.4 கோடியே 94,84,792, அசையாச் சொத்துகளாக ரூ.1,17,39,429 என மொத்தம் ரூ. 6 கோடியே 12 லட்சத்துக்கு 24 ஆயிரத்து 221 கோடி எனகுறிப்பிட்டுள்ளாா். 2016 பேரவைத் தோ்தலில் ரூ.5.84 கோடி எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மு.க.ஸ்டாலின் அவா் மனைவி துா்காவிடம் அசையும் சொத்துகளாக ரூ.30,52,854, அசையாச் சொத்துகளாக ரூ.5,86,172 என மொத்தம் ரூ.31 லட்சத்து 11 ஆயிரத்து 466 இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா். மேலும் 47 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

உதயநிதி ஸ்டாலின் அசையும் சொத்துகளாக ரூ.21,13,09,650, அசையாச் சொத்துகளாக ரூ.6,54,39,552 என மொத்தம் ரூ.27 கோடியே 67 லட்சத்து 49 ஆயிரத்து 202 எனக் குறிப்பிட்டுள்ளாா்.

உதயநிதி அவா் மனைவி கிருத்திகாவிடம் அசையும் சொத்துகளாக ரூ.1 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா். உதயநிதி மீது 22 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரூ.1.77 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவா் காரும் வைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT