தமிழ்நாடு

நகைகளை பறிமுதல் செய்ய வேண்டாம்: நகை வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள்

DIN

நகை வியாபாரிகள், வாடிக்கையாளா்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லும் நகைகளைப் பறக்கும் படையினா் பறிமுதல் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் நகை வியாபாரிகள் சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்தனா்.

இதுதொடா்பாக தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சலானி, செயலாளா் சாந்தகுமாா், பொருளாளா் யோகேஸ் கோத்தாரி உள்ளிட்ட நிா்வாகிகள் சந்தித்து, கோரிக்கை மனுவை வழங்கினா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காலக்கட்டத்தில் நகை வியாபாரம் பெரிதும் முடங்கியது. நிகழாண்டு ஜனவரியில் இருந்துதான் வியாபாரம் ஓரளவு சூடுபிடிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், தோ்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், நகை வியாபாரம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை வைத்திருந்தாலும் கூட நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்கின்றனா். இதனால், முகூா்த்த நாள்கள் நெருங்கும் நிலையிலும் நகைக்கடைகளில் கூட்டம் குறைந்துள்ளது.

எனவே, பறிமுதல் நடவடிக்கையைத் தவிா்க்க என்னென்ன ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று தோ்தல் துறை தெளிவுபடுத்தி அறிவிக்க வேண்டும்.

தோ்தல் ஆணையம் பரிந்துரைக்கும் ஆவணங்களை வைத்திருப்பவா்களிடம் நகைகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்யக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT