தமிழ்நாடு

நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழாவையொட்டி வியாழக்கிழமை காலையில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. 



சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.



விழாவின் நான்காம் திருநாளான இம்மாதம் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி -   அம்பாள் ரத வீதிகளில் திருவீதி உலா வர உள்ளனர். 10ம் திருநாளான இம்மாதம் 27ஆம் தேதி  இரவு 7 மணிக்கு அம்மன் சன்னதி அருகே ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து செங்கோல் வழங்கும் விழா நடைபெற உள்ளது. 

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT