புதுச்சேரியில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய மாட்டுவண்டியில் செல்லும் பாமக வேட்பாளர்கள். 
தமிழ்நாடு

புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் மாட்டுவண்டியில் சென்று மனு தாக்கல்

புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் மாட்டுவண்டியில் சென்று மனு தாக்கல் செய்தனர்.

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் மாட்டுவண்டியில் சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த பாமக தனித்துப் போட்டியிடுகிறது.

மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15 தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர்.

புதுச்சேரி பாமக அலுவலகத்தில் அக்கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்த மாநில அமைப்பாளர் தன்ராஜ், செய்திகளிடம் கூறுகையில், புதுச்சேரி தேர்தல் துறை பாரபட்சமாக  செயல்படுகிறது.

பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். பாமக போன்ற கட்சிகளை அவமதித்து, அலை கழிக்கின்றனர். புதுச்சேரியில் நேர்மையான தேர்தல் நடைபெறும் என்று சந்தேகமாக உள்ளது என்றார்.

இதனையடுத்து பாமக வேட்பாளர்கள் மாட்டுவண்டியில் சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்யப் புறப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னித்தீவு... ஆன் ஷீத்தல்!

இன்ப அதிர்ச்சி... ஐஸ்வர்யா!

பிகாரில் மூன்றாவது அணியை அமைக்க ஓவைசி மும்முரம்: பிற கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை!

கருப்பு, வெள்ளை... அஸ்லி மோனலிசா

நினைவுகள்... சுதா

SCROLL FOR NEXT