புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

கரோனா எதிரொலி: புதுச்சேரியில் தற்காலிகமாக பள்ளிகளை மூட சுகாதாரத்துறை சார்பில் ஆளுநருக்கு பரிந்துரை

புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, புதுச்சேரியில் தற்காலிகமாக பள்ளிகளை மூட சுகாதாரத்துறை துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது.

DIN


புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, புதுச்சேரியில் தற்காலிகமாக பள்ளிகளை மூட சுகாதாரத்துறை துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது.

புதுச்சேரியில் சில தினங்களாக கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் கரோனா தடுப்பூசி தொடர்பான உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர், புதுச்சேரியில் தற்காலிகமாக பள்ளிகளை மூட வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். 

மேலும் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பவர்கள், வாக்காளர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ‘மாஸ்க் புதுச்சேரி’ என்ற இயக்கத்தை அனைவரும் முன்னெடுத்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

அம்மனின் அவதாரங்கள்

SCROLL FOR NEXT