பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பிரசாரத்திற்காக தமிழகம் வருகிறார் பிரதமர்: சி.டி.ரவி

பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தமிழகத்திற்கு வரவுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

DIN

பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தமிழகத்திற்கு வரவுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரப் பணிகளில் தேர்தல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்திலும் அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மக்களை கவரும் வகையில், அவ்வபோது தேசிய தலைவர்களும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

அந்தவகையில், தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தமிழகத்திற்கு வரவுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.டி.ரவி, பிரதமர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள இடங்கள் மற்றும் தேதிகள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை!

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

SCROLL FOR NEXT