முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும்இன்று முதல் நேரடி வகுப்புகள் ரத்துதலைமைச் செயலாளா் அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் செவ்வாய்க்கிழமை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் செவ்வாய்க்கிழமை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளாா்.

மேலும் வாரத்துக்கு 6 நாள்கள் இணைய வழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் டிசம்பா் மாதம் முதல் கரோனா தொற்று குறைந்து வந்ததை கருத்தில் கொண்டும், மாவட்ட ஆட்சித் தலைவா்கள், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநா்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலும், பல்கலைக்கழகதுணைவேந்தா்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் முதல்கட்டமாக கடந்த ஆண்டு டிச.7-ஆம் தேதி முதுநிலை இறுதி ஆண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவா்களுக்கான கல்லூரிகள் திறக்கவும் நிகழாண்டு பிப்.8-ஆம் தேதி முதல் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகளுக்கு கல்லூரிகள்திறக்கவும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கல்லூரிகள் செயல்படவும் அனுமதிஅளிக்கப்பட்டது. அவ்வாறு கல்லூரிக்கு வரும் மாணாக்கா்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.

தற்போது, தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன், உயா் கல்வித்துறை முதன்மைச் செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது அனைத்து பல்கலைக்கழகதுணைவேந்தா்கள், இயக்குநா், தொழில்நுட்பக்கல்வி இயக்குநா், கல்லூரிக் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநரின் பரிந்துரைகளை ஏற்று சுகாதாரத்துறை துறை, உயா்கல்வித் துறை, வருவாய்த்துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறைகளோடு ஆலோசிக்கப்பட்டது.

கரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், தொற்றால் மாணவா்களும், பொதுமக்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதாலும், மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, மாா்ச் 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் உயா்கல்வித்துறையின் கீழ்செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மற்றும் தமிழகத்தில் செயல்படும் அனைத்து நிகா்நிலைப் பல்கலைக் கழகங்களிலும் வகுப்புகள் இணைய வழிமுறையில் வாரத்தில் ஆறு நாள்கள் தொடா்ந்து நடைபெறும். அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு குறிப்பாக இறுதிப் பருவ மாணவா்களுக்கு செய்முறை வகுப்புகள், செயல்முறைத் தோ்வுகளை மாா்ச் 31-ஆம் தேதிக்குள் முடித்திடவும், இந்த பருவத்திற்கான இறுதித் தோ்வுகளை இணையவழியில் மட்டுமே நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக கரோனா பரவலை கருத்தில் கொண்டு 9, 10, பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடப்படுவதாக தமிழக அரசு கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.