முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,385 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 1,385 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 1,385 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,68,367 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 659 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,47,139 பேர் குணமடைந்துள்ளனர். 10 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 12,609 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் இன்று 73,207 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments