நாளை முதல் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம்?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை முதல் 5 நாள்களுக்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை முதல் 5 நாள்களுக்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி நாளை காலை கும்மிடிப்பூண்டியில் விஜயகாந்த் பரப்புரையைத் தொடங்கி 5 ஆவது நாளில் திருத்தணியில் பரப்புரையை நிறைவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் விஜயகாந்தின் 5 நாள் தேர்தல் பரப்புரை குறித்த முழு சுற்றுப்பயண விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதி உடன்பாடு எட்டப்படாததை அடுத்து, அமமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. அதன்படி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தேர்தல் பரப்புரையின் இறுதிக் கட்டத்தில் விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபடுவார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.