முகப்பு
தமிழ்நாடு

24 நாள்களுக்குப் பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை

தேர்தலையொட்டி மாற்றமில்லாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை 24 நாள்களுக்குப் பிறகு சற்று குறைந்துள்ளது.

Updated On : 24 மார்ச், 2021 at 8:45 AM
கோப்புப்படம்
பகிர்:

தேர்தலையொட்டி மாற்றமில்லாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை 24 நாள்களுக்குப் பிறகு சற்று குறைந்துள்ளது.

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததன் காரணமாக பெட்ரோல் விலை 16 காசுகள் சரிந்துள்ளன.

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை அவ்வபோது மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது. அதன்படி மாநிலங்களில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

Advertisement

அந்தவகையில், கடந்த மாதம் படிப்படியாக உயர்ந்து வந்த பெட்ரோல் விலை, சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதன் பிறகு தமிழகத்தில் மாற்றமில்லாமல் இருந்தது.

இந்நிலையில் 24 நாள்களுக்குப் பிறகு தற்போது பெட்ரோல், டீசல் விலை 16 காசுகள் குறைந்துள்ளன.

அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை 92.05 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.29 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.