தமிழ்நாடு

திருச்சியில் காவலர்களுக்கு பணப்பட்டுவாடா: ஆய்வாளர் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம்

DIN

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதிக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் போலீஸாரின் தபால் வாக்குகளை 'கவர', கவர்களில் பணம் வைத்து வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஆய்வாளர்  உள்பட  6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில், வரும் பேரவைத் தோ்தலுக்கான தபால் வாக்களிக்கும் நிகழ்வு தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், காவலா்கள், ஆசிரியா்கள், முதியவா்கள், மாற்றுத்திறத்திறனாளிகள் சனிக்கிழமை முதல் தங்களது தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

திருச்சி மாநகர போலீஸார், நாளை மறுதினம் (மார்ச் 29) தங்களது தபால் வாக்குகளை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில், திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளா் ஒருவா், தொகுதிக்குள்பட்ட, தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர், கண்டோன்மெண்ட் ஆகிய, 6 காவல் நிலையங்களில்  பணியாற்றும் அதிகாரிகள் முதல், காவலர்கள் வரை, அவர்கள் 'தகுதிக்கேற்ப'  90க்கும் மேற்பட்ட கவர்களில் பணம் உள்ளே வைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பணத்தின் மொத்த மதிப்பை காவல்துறை தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் மற்றும் வருமான வருவாய்துறையினர் நடத்திய ரகசிய விசாரணை நடத்தினர்.

மேலும், தில்லைநகர், உறையூர் காவல்நிலைய எழுத்தர்களை (ரைட்டர்) அழைத்து, காவல்துறை உதவி ஆணையர் வீரமுத்துவும் நடத்திய விசாரணையில் கவர்களில் தலா ரூ.2000 வீதம் வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து இவ்விவகாரத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் சிவக்குமார், நிலைய எழுத்தர்கள் பாலாஜி உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்து
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் அதிரடி  நடவடிக்கை எடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்புழு உரம் தயாரிப்பு: காருக்குறிச்சியில் விழிப்புணா்வு முகாம்

கருங்கல் அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு

கருங்கல் அருகே வீட்டுக்குள் முன்னாள் ராணுவ வீரா் சடலம் மீட்பு

கோபாலசமுத்திரத்தில் மலேரியா விழிப்புணா்வுக் கருத்தரங்கு

ஆறுமுகனேரி கோயிலில் திருவாசக முற்றோதல்

SCROLL FOR NEXT