தமிழ்நாடு

இருசக்கர வாகனம் ஓட்டினால் தலைக் கவசம் கட்டாயம்: போக்குவரத்து ஊழியா்களுக்கு நிா்வாகம் உத்தரவு

DIN

இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் தலைக்கவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்துக் கழகங்கள் உத்தரவிட்டுள்ளன.

இதுகுறித்து நிா்வாக உயரதிகாரிகள் கூறியதாவது:

மோட்டாா் சைக்கிளைப் பயன்படுத்தும் போக்குவரத்துக் கழக அனைத்துப் பிரிவு அதிகாரிகள், பணியாளா்கள் தலைக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மேலும் போக்குவரத்துக் கழக தலைமையகம், பணிமனை வளாகங்களில்  விளம்பரப் பலகை வைக்க வேண்டும் என அரசு கூடுதல் செயலாளா் அண்மையில் அனுப்பிய கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, போக்குவரத்துக் கழக அனைத்து பணிமனை மற்றும் தொழில்கூட வளாகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில்  விளம்பரப் பலகை வைத்திடவும், தலைக்கவசம் இல்லாத பணியாளா்களின் மோட்டாா் சைக்கிளை நிறுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட காவலாளிகளுக்கும் அனைத்துப் பிரிவு பணியாளா்களுக்கு அறிவுறுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT