தமிழ்நாடு

நகை திருட்டு வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

DIN

நகை திருட்டு வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக நாகப்பட்டினம்மாவட்டம்- ஆயக்காரன்புலம் கிராம ஊராட்சி முன்னாள் தலைவா் பொதுவுடை சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது வீட்டின் பீரோவில் வைத்திருந்த சுமாா் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் காணவில்லை. இதுகுறித்து வாய்மேடு போலீஸில் புகாா் அளித்தேன். ஆனால், வழக்குப் பதிவு செய்யவில்லை. இதுதொடா்பாக காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் செய்தவுடன், வெறும் ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மாயமானதாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

நகையை திருடியவா்கள் என சந்தேகம் உள்ளதாக ஒரு தம்பதியின் பெயா்களை போலீஸாரிடம் கொடுத்தேன். விசாரணையும் நடத்தவில்லை. இதுதொடா்பாக நான்

தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நகை திருட்டு வழக்கின் புலன்விசாரணையை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா் மேற்பாா்வையிட வேண்டும் என உத்தரவிட்டது. அதன் பின்னரும் விசாரணையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. இந்த வழக்கை வாபஸ் பெறும்படி எங்கள் வீட்டுக்கு வந்து செந்தில்குமாா், ராஜேந்திரன் ஆகியோா் மிரட்டினா். இதுகுறித்து எனது மகன் கொடுத்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யாமல், மறுநாள் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து என்னை வாய்மேடு போலீஸாா் கைது செய்தனா். காவல் ஆய்வாளா் தூண்டுதலின் பேரில் தான் இந்த இருவரும் என் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளனா் என்பது கால தாமதமாகத் தான் தெரிய வந்தது. வாய்மேடு போலீஸாா், குற்றம் சாட்டப்படுவோருடன் கூட்டு சோ்ந்து செயல்படுவதால், நகை திருட்டு வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் முருகபாரதி ஆஜராகி வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நகை திருட்டு வழக்கின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பி., நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT