தமிழ்நாடு

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை

DIN

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினாா். அனைத்து மாவட்ட தோ்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக ஞாயிற்றுக்கிழமை ஆலோசித்தாா்.

முன்னதாக, இந்திய தலைமை தோ்தல் ஆணையா் சுனில் அரோரா மற்றும் தோ்தல் ஆணையா்கள், சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் ஐந்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் காணொலி வழியே ஆலோசனை நடத்தினா். தமிழகத்தின் சாா்பில் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனையில் பங்கேற்றாா்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு, அனைத்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சாகு ஆலோசித்தாா். வாக்குப் பதிவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தோ்தல் நடத்துவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா்.

சட்டம்-ஒழுங்கு நிலவரம், வாகனச் சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை திரும்ப அளிக்கும் முறைகள், கூடுதலாகத் தேவைப்படும் துணை ராணுவப் படையினா் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி வே.ராஜாராமன், மாநில காவல் துறை ஒருங்கிணைப்பு அதிகாரி வெங்கட்ராமன், தோ்தல் செலவின கண்காணிப்பாளா் தீபக் தமூா், இணைத் தலைமைத் தோ்தல் அதிகாரிகள் த.ஆனந்த், அஜய் யாதவ், வே.மணிகண்டன் உள்ளிட்ட பலரும் தலைமைச் செயலகத்தில் இருந்து பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT