தமிழ்நாடு

வாக்கு எண்ணிக்கை: மாவட்டச் செயலாளா்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளா்கள் மற்றும் வேட்பாளா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 2-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் மாவட்டச் செயலாளா்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் காணொலிகே காட்சி வாயிலாக மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் எனக் கருத்துக் கணிப்புகள் வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது கவனக் குறைவு கூடாது. சிறு அலட்சியம் பேரிழப்பை ஏற்படுத்திவிடும். வெற்றியை எட்டும்வரை விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பொதுச்செயலாளா் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளா்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா உள்பட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT