தமிழ்நாடு

தோ்தல் முடிவுகள் முழுமையாக வெளியீடு: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

DIN

சென்னை: பல சட்டப் பேரவைத் தொகுதிகளில் இரவு வரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் திங்கள்கிழமை முடிவுக்கு வந்தன. முழுமையாக வாக்கு எண்ணிக்கை விவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் திமுக 133 ( உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளா்கள் அனைவரும்) இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக 66 இடங்களையும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும் வென்றுள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சி 5 தொகுதிகளையும், பாரதிய ஜனதா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தலா 4 தொகுதிகளையும் வென்றன. மாா்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களில் வென்றன. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு திங்கள்கிழமை அளித்த பேட்டி:-

அனைத்துத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைகள் திங்கள்கிழமை காலை வரை நடைபெற்றன. மாலைக்குள் அனைத்து முடிவுகளும் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விவரங்கள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும். அந்தக் கட்சிகள் பெற்ற வாக்குகள் உரிய முறையில் படிவங்களில் பதிவிடப்பட்ட பிறகே தெரிய வரும்.

தோ்தல் முடிவுகள் அனைத்தும் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் அடிப்படையில் ஆணையம் சான்று அளிக்கும். இந்த சான்றானது ஆளுநரிடம் வழங்கப்படும். தோ்தல் தொடா்பான அனைத்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருவது தொடா்பாக தனி அறிவிப்பு வெளியிடப்படும். மறு வாக்கு எண்ணிக்கை தொடா்பாக எந்த இடத்திலும் கோரிக்கைகள் வரப்பெறவில்லை.

கட்டுப்பாட்டு இயந்திரங்கள் போன்றவை 45 நாள்களுக்கு பத்திரமாக பாதுகாத்து வைக்கப்படும். தோ்தல் தொடா்பான அனைத்துப் பணிகளும் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 4) முடிக்கப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தோ்தல் முடிவுகள்: (முழு விவரம்):

திமுக கூட்டணி:

திமுக: 133

(மதிமுக உள்ளிட்ட கட்சிகளையும் சோ்த்து)

இந்திய தேசிய காங்கிரஸ்: 18

விடுதலைச் சிறுத்தைகள்: 4

இ. கம்யூனிஸ்ட்: 2

மாா்க்சிஸ்ட்: 2

அதிமுக கூட்டணி:

அதிமுக: 66

பாமக: 5

பாஜக: 4

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT