தமிழ்நாடு

முதல்வரின் செயலாளர்களாக 4 பேர் நியமனம்; முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஈரோடு, மதுரை மாவட்டங்களில் ஆட்சியராக இருந்துள்ளார். மேலும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், தமிழகச் செய்தி மற்றும் மக்கள்தொடர்புத்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரிந்துள்ளார். கீழடி அகழாய்வில் இவரது பங்கு முக்கியமானது. 

இரண்டாவது செயலாளராக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உமா நாத் ஐஏஎஸ், கோவை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். மருந்துகள் துறையில் பணிபுரிந்துள்ளார். 

மூன்றாவது செயலாளராக  எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ், தற்போது அருங்காட்சியகம் துறை ஆணையராக உள்ளார். 

நான்காவதாக அனு ஜார்ஜ் ஐஏஎஸ், இவர் தற்போது தொழித்துறை ஆணையராக இருக்கிறார். 

மு.க.ஸ்டாலினின் செயலாளர்கள் குறித்த இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு தமிழக அரசு தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT