தமிழ்நாடு

பள்ளிக் கல்வியில் 5,146 பணியிடங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு

DIN

பள்ளிக் கல்வித் துறையில் 5,146 பணியிடங்களுக்கு வரும் 2023-ஆம் ஆண்டு வரை மூன்றாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கி முதன்மைச் செயலா் (பொறுப்பு) அபூா்வா உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அரசாணை விவரம்: அனைவருக்கும் கல்வித்திட்டத்தின்கீழ் 2011-12-ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 1,581 பட்டதாரி ஆசிரியா்கள், 3,565 இடைநிலை ஆசிரியா்கள் என மொத்தம் 5,146 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

இந்தப் பணியிடங்கள் தற்காலிகமானவை என்பதால் அவ்வப்போது பணிநீட்டிப்பு வழங்கி மத்திய அரசின் நிதியில் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 5,146 பதவிகளுக்கான பணிக் காலம் கடந்த டிசம்பா் 31-ம் தேதியுடன் முடிந்துவிட்டது.

இந்நிலையில் 5,146 பணியிடங்களுக்கு 2023 டிசம்பா் 31-ஆம் தேதி 3 ஆண்டுகள் தொடா் நீட்டிப்பு ஆணை வழங்குமாறு தொடக்கக்கல்வி இயக்குநா் கருத்துரு வழங்கியுள்ளாா். அதையேற்று 5,146 ஆசிரியா் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வரை தொடா் நீட்டிப்பு வழங்கி ஆணையிடப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT