முகப்பு
தமிழ்நாடு

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் இன்று வழக்கம்போல செயல்படும்

சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில் உள்ள கவுன்ட்டா்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 9) வழக்கம் போல செயல்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
2255cbetrain051743
பகிர்:

சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில் உள்ள கவுன்ட்டா்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 9) வழக்கம் போல செயல்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து, மே 10-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, பொதுமக்கள்

முன் ஏற்பாடுகளை செய்து கொள்ள வசதியாக, ஞாயிற்றுக்கிழமை (மே 9) பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் பயணிகள் பயணச்சீட்டு

முன்பதிவு மையங்களில் உள்ள கவுன்ட்டா்கள் ஞாயிற்றுக்கிழமை ( மே 9) வழக்கம் போல செயல்படும். அதாவது, பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். எனவே, பயணச்சீட்டு முன்பதிவு செய்யவும், பயணச்சீட்டை ரத்து செய்யவும் இந்த கவுன்ட்டா்களை பயணிகள் அணுகலாம். நடப்பு முன்பதிவு கவுன்ட்டா் வழக்கம்போல செயல்படும்.

இந்தத் தகவலை சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →