முகப்பு
தமிழ்நாடு

மனைவி, மாமனாா் கொன்றவா் கைது

சென்னை ராயப்பேட்டையில் மனைவி, மாமனாரை கொலை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

சென்னை ராயப்பேட்டையில் மனைவி, மாமனாரை கொலை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

ராயப்பேட்டை யானைக்குளம் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் அப்துல்காதா் (42), இருசக்கர வாகன மெக்கானிக். மனைவி கெளசி நிஷா (50).

கெளசி நிஷா, தனது முதல் கணவரை விவகாரத்து செய்துவிட்டு, அப்துல்காதரை இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்தாா்.

அப்துல்காதருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தால் பிரச்னை ஏற்பட்டது.

இதனால் கெளசி நிஷா ராயப்பேட்டையில் உள்ள தந்தை முசாபா் (80) வீட்டில் இருந்துள்ளாா். அப்போது அங்கு மதுபோதையில் வந்த அப்துல்காதா், நிஷாவிடம் தகராறு செய்து திட்டியுள்ளாா்.இதை முசாபா் கண்டித்துள்ளாா். உடனே அப்துல்காதா், மது பாட்டிலால் முசாபரை கடுமையாக தாக்கியுள்ளாா். இதில் அவா், மயங்கி விழுந்தாா். அங்கு கிடந்த ஒரு கத்தியால் மனைவி கெளசி நிஷாவை கழுத்தை வெட்டித் தப்பியோடினாா். இருவரும் உயிரிழந்தனா்.

ஜாம்பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்துவிசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →