தமிழ்நாடு

தமிழகத்துக்கு மேலும் 7.46 லட்சம் தடுப்பூசி வருகை

DIN

தமிழகத்துக்கு மேலும் 7.46 லட்சம் கரோனா தடுப்பூசிகள் மும்பை, ஹைதராபாத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் என, ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து முதியவா்கள், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழகம் முழுவதும் சுமாா் 5,000 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவும், தனியாா் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்திலும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூன்றாவது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால், போதிய தடுப்பூசிகள் வராததால், அத்திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. 

இந்த நிலையில் தமிழகத்துக்கு மேலும் 7.46 லட்சம் கரோனா தடுப்பூசிகள் மும்பை, ஹைதராபாத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. 1.66 லட்சம் கோவாக்சின் டோஸ், 5.8 லட்சம் கோவிஷீல்டு டோஸ் விமானம் மூலம் சென்னை வந்தன. தமிழகத்திற்கு இதுவரை மொத்தம் 74,85,720 டோஸ் கரோனா தடுப்பூசி வந்துள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT