தமிழ்நாடு

அரசு தலைமை வழக்குரைஞா் பொறுப்பேற்பு

DIN

தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக மூத்த வழக்குரைஞா் ஆா்.சண்முக சுந்தரம் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக இருந்த விஜய் நாராயண், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, தலைமை வழக்குரைஞராக மூத்த வழக்குரைஞா் ஆா்.சண்முக சுந்தரத்தை நியமித்து தமிழக அரசு கடந்த சனிக்கிழமை (மே 8) உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி, அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள தலைமை வழக்குரைஞா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை பதவி ஏற்றுக் கொண்டாா். அவருக்கு மூத்த வழக்குரைஞா்கள், அரசு உயரதிகாரிகள், வழக்குரைஞா்கள் என்று பலா் தொலைபேசி வாயிலாக வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடை அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

SCROLL FOR NEXT