முகப்பு
தமிழ்நாடு

நாளை அனைத்துக் கட்சி கூட்டம்: கரோனா குறித்து ஆலோசனை

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு கட்சியின் சார்பாகவும் இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.