முகப்பு
தமிழ்நாடு

மருத்துவ அவசரநிலை என உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்

நாட்டில் மருத்துவ அவசரநிலை பிரகடனம் என்று உத்தரவிட உயர்நீதிமன்றத்திற்கு அனுமதியில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை (கோப்புப்படம்)
பகிர்:


நாட்டில் மருத்துவ அவசரநிலை பிரகடனம் என்று உத்தரவிட உயர்நீதிமன்றத்திற்கு அனுமதியில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

நாட்டில் மருத்துவ அவசர நிலையைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.

ஆக்ஸிஜன் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாடில் கொண்டுவர கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதிகள் அமர்வு, மருத்துவ அவசரநிலை பிரகடனம் என்று உத்தரவிட உயர்நீதிமன்றத்திற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தது. 

மத்திய, மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →