முகப்பு
தமிழ்நாடு

சீமான் தந்தை மறைவு: வைகோ இரங்கல்

சீமான் தந்தை செந்தமிழன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 13 மே, 2021 at 7:48 PM
பகிர்:

சீமான் தந்தை செந்தமிழன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தாயைப் போற்றும் அதே நேரத்தில், தந்தை வழிக் குடி மரபைத்தான் நாம் பின்பற்றி வருகின்றோம். தந்தை வழியில் மரபுகளை அமைத்துக் கொள்வது நம்முடைய பண்பாடு. அந்த நிலையில், பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள திரு சீமான் அவர்களின் தந்தையின் மறைவு, அவருக்கும், குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் பேரிழப்பு ஆகும்.

Advertisement

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், செந்தமிழனுக்கு, புகழ் வணக்கம்! இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.