தமிழ்நாடு

அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்: கரோனா குறித்து ஆலோசனை

DIN

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.

இதில் திமுக சார்பில் டி.ஆர். பாலு, ஆர்.எஸ். பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றுள்ளார். 

காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, முனிரத்னம்,  மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

விசிக சார்பில் சிந்தனைச் செல்வன், பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராம்ச்சந்திரன், மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

மதிமுக சார்பில் சின்னப்பா, பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்னதுரை, நாகை மாலி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். 

இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்று பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

மது அருந்துவோரை விட கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்: ஆய்வில் தகவல்!

வெம்பக்கோட்டை அருகே வைகாசி விசாகத் திருவிழா

SCROLL FOR NEXT