முகப்பு
தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் பாலமுருகன் மறைவு: வைகோ இரங்கல் 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 14 மே, 2021 at 4:34 PM
பகிர்:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி பாலமுருகன் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்குத் தம்பிகளாக இருப்பவர்கள், குடும்பப் பொறுப்புகளை நன்முறையில் நிறைவேற்றி, அண்ணன்மார்களின் வெற்றிக்குப் பின்புலமாக இருக்கின்றார்கள். 

இப்படிப்பட்ட தம்பியரைப் பெற்ற அண்ணன்மார்கள், சாதனைகளை நிகழ்த்தி இருக்கின்றார்கள். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை நினைவு கூர்ந்தால், எத்தகைய வாழ்வியல் இலக்கியமாகவும், இலக்கணமாகவும் அப்பொன்மொழி திகழ்கின்றது என்பது புரியும். பாலமுருகன் மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.