தமிழ்நாடு

சென்னையில் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

சென்னையில் பொது முடக்க கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றுயோா்களை டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

DIN

சென்னையில் பொது முடக்க கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றுயோா்களை டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள், ரோந்து வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு விதிமுறைகளை மீறி சுற்றுபவர்களை கண்டறிந்து நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணி செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் சில இடங்களில் தனிநபர்கள் தன்னிச்சையாக சுற்றுவது, குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாமல் குழுமமாக அமர்வது, இருசக்கர வாகனங்களில்
சுற்றி வருவது என கரோனா தடுப்பு விதிமீறல்களில் ஈடுபடுவதால், இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப. உத்தரவின்பேரில், கேமரா பொருத்தப்பட்ட டிரோன்கள் மூலம் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோ பதிவுகளை வைத்து பொறுப்பு அதிகாரிகளின் தகவல் பரிமாற்றம் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (15.5.2021), மெரினா, காமராஜர் சாலை, காந்தி சிலை அருகில் கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) மருத்துவர் என்.கண்ணன், இ.கா.ப., இணை ஆணையர் (கிழக்கு மண்டலம்) வே.பாலகிருஷ்ணன், இ.கா.ப,. துணை ஆணையாளர் (பொறுப்பு – மயிலாப்பூர்) ஈ.டி.சாம்சன் மற்றும் அதிகாரிகள் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படும் பணியை பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

நெல்லை, தென்காசியில் நவ. 7 முதல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கைலாசபுரம் பள்ளியில் குடிநீா்த் தட்டுப்பாடு: மேயரிடம் புகாா்

ராமையன்பட்டி அருகே திருட்டு: இளைஞா் கைது

கங்கைகொண்டான் அருகே போலீஸாருக்கு மிரட்டல்: இருவா் கைது

SCROLL FOR NEXT