தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் சிதம்பரம் அருகே உள்ள தில்லைவிடங்கன் கிராமம். 
தமிழ்நாடு

கிராமங்களுக்குள் நுழைந்து கரோனா தொற்று: மக்கள் அச்சம்

சிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் பெண் உள்பட 8 பேருக்கு கரோனா தோற்று நோய் ஏற்பட்டுள்ளதால், அக்கிராம மக்கள் அச்சம் ஏற்பட்டு தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். 

DIN

சிதம்பரம்: சிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் பெண் உள்பட 8 பேருக்கு கரோனா தோற்று நோய் ஏற்பட்டுள்ளதால், அக்கிராம மக்கள் அச்சம் ஏற்பட்டு தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். 

தமிழகத்தில் கரோனா தொற்றுநோய் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் தொற்று நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், சிதம்பரம் அருகே உள்ள தில்லைவிடங்கன் கிராமத்தில் பெண் உகபட 8 பேருக்கு தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மூன்று பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மற்றவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளனர்.  ஒரே கிராமத்தில் 8 பேருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் அக்கிராம மக்கள் வெளியே வராமலும் வெளியூரிலிருந்து கிராமத்திற்கு யாரும் வராத அளவில் தடுப்பு கட்டைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யாருக்காவது தொற்றுநோய் உள்ளதா எனவும் பரிசோதனை செய்து வருகின்றனர். 
இதுவரை நகர புறங்களில் மட்டுமே கரோனா தொற்று பரவி வந்த நிலையில் தற்போது ஒரே கிராமத்தில் 8 பேருக்கு தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட இந்தியாவில் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு: ஜப்பான் பிரதமா் இரங்கல்

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவா் கைது!

தஞ்சாவூா் மாநகரில் ஆக.19-ல் மின் தடை

போதை மாத்திரை விற்ற மூவா் கைது

இளைஞா் கொலை: இருவா் கைது

SCROLL FOR NEXT