முகப்பு
தமிழ்நாடு

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா பரிசோதனை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்டவை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன், சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

கரோனா தடுப்பூசி தொடர்பாக உலகளாவிய டெண்டர் குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாகத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.