தமிழ்நாடு

மின் இணைப்புகளுக்கு டெபாசிட் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எச்சரிக்கை

DIN


மின் இணைப்புகளுக்கு டெபாசிட் வசூலித்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியுள்ளார். 

கரூர் அடுத்த புகழூர் டிஎன்பிஎல் ஆலையில் 150 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் அமைப்பது குறித்து டிஎன்பிஎல் ஆலை நிர்வாக அதிகாரிகள் மற்றும் சேலம் ஸ்டீல் ஆலை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை டிஎன்பிஎல் ஆலை கூட்டரங்கில் ஆலோசனை நடத்திய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், 

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து, நோய்த தொற்றால் பாதிக்கப்பட்ட''மக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் உள்ளிட்ட'மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகிறார். கரூர் மாவட்டத்தில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 300 படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

மாவட்டத்திற்கு கூடுதலாக ஆக்ஸிஜன் தேவைப்படும் சூழலில் தொழில்துறை அமைச்சர் மூலம் டிஎன்பிஎல் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் வகையில், இத்தாலியில் கம்பரசர் உள்ளிட்ட'உபகரணங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்த உபகரணங்கள் இந்த மாத இறுதியில் வந்து ஜூன் மாதம் 2}வது வாரத்தில்தான் உற்பத்தியைத் தொடங்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இப்போது அவசரமாக ஆக்ஸிஜன் தேவைப்படுவதால், ஏற்கனவே சேலத்தில் அங்குள்ள ஸ்டீல் ஆலை மூலமாக ஒரே இடத்தில் 500 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்துகொண்டிருக்கிறது. 

அங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்களை இங்கு டிஎன்பிஎல் ஆலைக்கு வரவழைத்து டிஎன்பிஎல் நிர்வாக அதிகாரிகள், ஆட்சியர் ஆகியோரிடம் பேசி ஒரு வாரத்திற்குள் டிஎன்பிஎல் திருமணமண்டபத்தில் 150 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்த உள்ளோம். ஆலையில் உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜனை ஆலையிலிருந்து மண்டபத்திற்கு ஒன்றரை கி.மீ. தூரம் குழாய் மூலம் எடுத்துச் சென்று நோயாளிகளுக்கு பயன்படுத்த உள்ளோம். இதற்கான கண்காணிப்பு அலுவலர்களாக மாவட்ட'ஆட்சியரும், டிஎன்பிஎல் ஆலை அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஆக்ஸிஜனை பொறுத்தவரை மாவட்டத்தில் இப்போதைக்கு பற்றாக்குறை இல்லை. தேவையான அளவிற்கு அரசு ஆக்ஸிஜனை வழங்கி வருகிறது. மருத்துவமனைகளில் ஆம்புலன்சுக்கு கூடுதல் கட்டணமோ அல்லது மயானத்தில் கூடுதல் கட்டணம் கேட்பது தொடர்பாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.  ரெம்டிசிவிர் மருந்து எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் அந்த மருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் தட்டுப்பாடின்றி வழங்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

மின்கட்டணம் தொடர்பாக, பாமக தலைவரும், மநீம தலைவரும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். மின்கட்டணத்தை பொறுத்தவரை தேவையான கால அவகாசத்தை முதல்வர் வழங்கியிருக்கிறார். தற்போது இரண்டு மாதகாலத்திற்குண்டான கணக்கீடு முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த காலங்களில் நடைபெற்ற குளறுபடி வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் மிகத்தீவிரமாக ஆய்வு செய்து அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக எந்த இடங்களிலும் கூடுதல் டெபாசிட் வசூல் பண்ணக்கூடாது என மின்வாரியத்தின் மூலம் அனைத்து அலுவலகங்களுக்கும் கடந்த ௧௦-ம்தேதியே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவையே போட்டிருக்கிறோம். எந்த இடத்திலும் டெபாசிட் வசூலிக்கவில்லை. பாமக தலைவரும், மநீம தலைவரும் பொதுவாக கூறியிருக்கிறார்கள். இந்த சர்வீஸ் எண்ணில் இந்த இடங்களில் இந்த ஊர்களில் டெபாசிட் வசூலிக்கப்பட்டிருக்கு எனக்கூறினால் நிச்சயம் துறைரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் மாவட்டத்தில் இதுதொடர்பான புகார் வரவில்லை என்றார் அவர்.

பேட்டியின்போது எம்எல்ஏக்கள் இரா.மாணிக்கம்(குளித்தலை), மொஞ்சனூர் இளங்கோ(அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்) மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT