கி.ரா. மறைவு: முன்னாள் முதல்வர் இபிஎஸ் இரங்கல்
எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன்(98) வயது மூப்பின் காரணமாக, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை இரவு (மே 17) காலமானார்.
படிக்க: எழுத்தாளர் கி.ரா. காலமானார்
அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான இபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்,அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.