கி.ராஜநாராயணன் 
தமிழ்நாடு

சொந்த ஊரில் எழுத்தாளர் கி.ரா. இறுதிச் சடங்கு

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள இடசெவலில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

இன்று பிற்பகல் 1 மணிக்கு புதுச்சேரியில் இருந்து சொந்த ஊருக்கு கி.ரா. உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.

தற்போது அவரது உடல் லாஸ்பேட்டையிலுள்ள அரசு குடியிருப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கி.ரா. இறுதிச் சடங்கில் அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று அவரது மகன் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தமிழக அரசு அவரது கோரிக்கைக்கு செவிசாய்த்துள்ளது.

எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.  

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு புதுச்சேரியில் இருந்து கோவில்பட்டி அருகேவுள்ள இடைசெவல் கிராமத்திற்கு கி.ரா. உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூா் உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் பொறுப்பேற்பு

அரசுக் கல்லூரியில்போதைப் பொருள் விழிப்புணா்வு

ஆக. 11-இல் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி: ஆட்சியா் ஆலோசனை

ஜெயங்கொண்டத்தில் ரூ.9.83 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

ஆடி 4 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பால்குடம், தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT