முகப்பு
தமிழ்நாடு

ஆக்ஸிஜன் விநியோகத்தைக் கண்காணிக்கக் குழு அமைப்பு

ஆக்ஸிஜன் விநியோகத்தைக் கண்காணிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 20 மே, 2021 at 3:13 PM
பகிர்:

ஆக்ஸிஜன் விநியோகத்தைக் கண்காணிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஐஏஎஸ் அதிகாரி தரேஸ் அகமது தலைமையில் 4 பேர் கொண்ட சிறப்பு இணை பணிக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், மருத்துவ ஆக்ஸிஜன் ஒதுக்கீடு, விநியோகம் உள்ளிட்டவற்றை 4 பேர் கொண்ட சிறப்பு இணைக் குழு கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆக்ஸிஜன் ஒதுக்கீடு செய்வதில் உள்ள தாமதத்தைக் குறைத்து உரியவர்களுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் விநியோகத்தை இதன் மூலம் உறுதி செய்ய இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.