முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 35,873 பேருக்கு கரோனா; 448 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,873 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,873 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,873 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 5,559 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,06,861 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 30,314 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 448 போ் தமிழகத்தில் பலியாகியுள்ளனர். இவர்களில் 169 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 279 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 20,046 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, மேலும் 25,776 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். 

இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,02,537-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 84,278 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.