சென்னையில் பொதுமுடக்கத்தை மீறியதாக 4,909 வழக்குகள்:4,680 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில், முழு பொதுமுடக்கத்தை மீறியதாக வெள்ளிக்கிழமை 4,909 வழக்குகள் பதியப்பட்டு, 4,680 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில், முழு பொதுமுடக்கத்தை மீறியதாக வெள்ளிக்கிழமை 4,909 வழக்குகள் பதியப்பட்டு, 4,680 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில், கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், மே 17-ஆம் தேதி முதல் மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ-பதிவு கட்டாயம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி, சென்னைக்குள் செவ்வாய்க்கிழமை முதல் பயணிக்க இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்தது.
இதைக் கண்காணிக்கும் வகையில் சென்னை முழுவதும் 348 இடங்களில் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறது.
இதன் விளைவாக கடந்த 4 நாள்களாக சென்னையில் இ-பதிவு இன்றி சாலையில் சுற்றியும் திரியும் நபா்கள் மீது போலீஸாா் தீவிரமாக வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமை பொதுமுடக்க மீறல் தொடா்பாக 4,909 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,680 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல முக் கவசம் அணியாதவா்கள் மீது 3,693 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 355 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.