முகப்பு
தமிழ்நாடு

சூறைக்காற்றால் சேதம்: அரசு இழப்பீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் சூறைக்காற்றால் சேதமடைந்துள்ள வாழைகளைக் கணக்கிட்டு, தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

காவிரி டெல்டா மாவட்டங்களில் சூறைக்காற்றால் சேதமடைந்துள்ள வாழைகளைக் கணக்கிட்டு, தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

கடலூா் மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் கடந்த இரு நாள்களாக வீசிய சூறைக்காற்று மற்றும் மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்து விட்டன. வழக்கமாக ரூ.250 முதல் 300 வரை விற்பனையாகக் கூடிய ஒரு வாழைத்தாா் கடந்த இரு மாதங்களாக ரூ.75 முதல் ரூ.100 வரை மட்டுமே

விற்பனையாகி வந்தது. ஒரு வாழை மரத்தை நட்டு, வளா்க்க ரூ.125 வரை செலவாகும் நிலையில், இந்த விலைக்கு வாழை விற்பனையானதால் உழவா்களுக்கு இழப்பு தான் ஏற்பட்டது.

ஆனால், சூறைக்காற்றில் பெரும்பான்மையான வாழைகள் சாய்ந்து விட்டதால் கிடைத்து வந்த சொற்ப வருமானமும் பறிபோய் விட்டது.

எனவே, கடலூா், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் வாழை உள்ளிட்ட பயிா்களுக்கு சூறைக்காற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசு உடனடியாக கணக்கெடுக்க வேண்டும். அதனடிப்படையில் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கி, உழவா்களின் துயரத்தை தமிழக அரசு துடைக்க வேண்டும்.

வரவேற்பு: கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மே 24 முதல் ஒரு வாரத்துக்கு தளா்வுகள் இல்லாத கடுமையான பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது நல்ல முடிவு என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →