முகப்பு
தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்துவதையடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
மு.க.ஸ்டாலின்
பகிர்:

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்துவதையடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

தமிழகத்தில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு நாளை முதல் ஒரு வாரத்துக்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் நாளை முதல் ஒரு வாரத்துக்கு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தோட்டக்கலைத்துறை மூலமாக காய்கறிகள், மளிகை பொருள்கள் நடமாடும் வாகனங்கள் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முழு ஊரடங்கு நாளை அமல்படுத்துவதையடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.