தமிழ்நாடு

தளா்வுகள்: ஒரே நாளில் கரோனாவை பரவச் செய்வதற்கான ஏற்பாடு

DIN

தளா்வில்லா முழு பொதுமுடக்கத்தையொட்டி அளிக்கப்பட்ட தளா்வுகள், ஒரு வாரத்தில் பரவ வேண்டிய கரோனாவை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் பரவச் செய்வதற்கான ஏற்பாடு தான் என பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பது: திங்கள்கிழமை முதல் தளா்வில்லா முழு பொதுமுடக்கம் என்பதால் சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட தளா்வுகள் அபத்தமானவை. அனைத்துக் கடைகள், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொத்துக் கொத்தாக கரோனா பரவுவதற்கே இது வழிவகுக்கும்!

சென்னையிலிருந்தும், பிற நகரங்களிலிருந்தும் 4500 பேருந்துகள் இயக்கப்பட்டதும், வழக்கமான போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டதும் தேவையற்றவை. இவை தமிழகத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கரோனாவை ஏற்றுமதி செய்து விடும்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கரோனா வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதைத் தவிா்ப்பதற்காகவே கடுமையான ஊரடங்கு வலியுறுத்தப்பட்டது.

ஆனால், தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை, ஒரு வாரத்தில் படிப்படியாக பரவ வேண்டிய கரோனாவை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் பரவச் செய்வதற்கான ஏற்பாடு தான். ஒரு வார தளா்வில்லா முழு பொதுமுடக்கத்தால் கிடைக்கும் நன்மையை இரு நாள் தளா்வு தகா்த்து விட்டது என்பதே உண்மை என ராமதாஸ் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

SCROLL FOR NEXT