பொன்முடி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஜூன் 14 முதல் அண்ணா பல்கலை. தேர்வுகள்: பொன்முடி

2017 ஒழுங்குமுறைப்படி முதுநிலை, இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதி முதல் இணைய வழியில் தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

DIN


அண்ணா பல்கலைக் கழகத்தில் 2017 ஒழுங்குமுறைப்படி முதுநிலை, இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதி முதல் இணைய வழியில் தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

மற்ற பல்கலைக் கழகங்களில் ஜூன் 15-ல் தொடங்கி ஜூலை 15-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, 2017 ஒழுங்குமுறைப்படி எழுதிய இளநிலை மாணவர்களுக்கு ஜூன் 14-ம் தேதி தேர்வு தொடங்குகிறது.

மற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 21-ம் தேதி தொடங்கவுள்ளது. கடந்த முறை தேர்வு எழுதாமலும், கட்டணம் செலுத்தாமலும் உள்ள மாணவர்கள் ஜூன் 3-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து தேர்வு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

SCROLL FOR NEXT